25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


தேசிய தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீரர்களின் அதிரடி - பிரவீன் சித்ரவேல் உள்ளிட்டோர் தங்கம் வென்று அசத்தல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீரர்களின் அதிரடி - பிரவீன் சித்ரவேல் உள்ளிட்டோர் தங்கம் வென்று அசத்தல்.

ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்று வரும் 65-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், தமிழக வீரர், வீராங்கனைகள் தொடர்ச்சியாக பதக்கங்களைக் குவித்து அசத்தி வருகின்றனர்.

ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' (Triple Jump) போட்டியில் தமிழகத்தின் நட்சத்திர வீரர் பிரவீன் சித்ரவேல் பங்கேற்றார். தனது அபார திறமையை வெளிப்படுத்திய அவர், தனது முதல் முயற்சியிலேயே 16.92 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

4x400 மீட்டர் கலப்பு ரிலே: ஷரண், புனிதா, ஆகாஷ் ராஜ் மற்றும் பெரியசாமி ஆகியோர் கொண்ட தமிழக அணி, 3 நிமிடம் 23.51 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றது.

110 மீட்டர் தடை ஓட்டம்: தமிழக வீரர் மானவ் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

4x100 மீட்டர் ஆண்கள் பிரிவு: சாம் வசந்த், ராகுல் குமார், கிட்சன் மற்றும் மானவ் அடங்கிய தமிழக அணி 40.02 வினாடிகளில் இலக்கை கடந்து வெள்ளி வென்றது.

4x100 மீட்டர் பெண்கள் பிரிவு: நந்தினி, சுபா, கிருத்திகா மற்றும் கிரிதராணி கொண்ட தமிழக அணி 45.07 வினாடிகளில் கடந்து வெள்ளி வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் தமிழக வீரர்களின் சிறப்பான செயல்பாடு தடகள வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News