உலக ‘யூத்’ தடகளம்: உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா 7வது இடம்.
அமெரிக்காவில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ‘யூத்’ தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 21வது சீசன் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியா சார்பில் பூஜா சிங் (19) பங்கேற்றார்.
அதிகபட்சமாக 1.84 மீட்டர் உயரம் தாண்டிய பூஜா சிங், 7வது இடத்தைப் பிடித்தார்.
பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியின் இறுதிச்சுற்றில் பூமிகா, தஹுரா, தானு, தியா ஆகியோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. பந்தய தூரத்தை 3 நிமிடம் 45.28 வினாடிகளில் கடந்த இந்திய அணி 9வது இடத்தைப் பிடித்தது.
இந்தத் தொடரில் இந்தியாவுக்கு 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் 3 பதக்கங்கள் கிடைத்தன.
0
Leave a Reply