விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை தொகுதிகளுக்கான புதிய பொதுப் பார்வையாளர் பொறுப்பேற்பு.
விருதுநகர் மாவட்டத்தில் வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அனைத்துப் பார்வையாளர்களும் தற்போது தங்களது பணிகளை முழுமையாகத் தொடங்கியுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள பிற சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்கனவே பார்வையாளர்கள் வருகை தந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுப் பார்வையாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த திரு. அனுப்குமார் யாதவ், I A S . அவர்களுக்குப் பதிலாக, புதிய பொதுப் பார்வையாளராக திரு. நவநீத் குமார், I A S . அவர்கள் நியமிக்கப்பட்டு, வருகை தந்து தனது பணிகளைத் தொடங்கியுள்ளார்.
இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் அனைவரும் வருகை தந்துள்ளதோடு, தேர்தல் பணிகள் அனைத்தும் முழுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
பார்வையாளர்கள் மற்றும் தொடர்பு விவரங்கள்:
விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை: இத்தொகுதிகளுக்குப் பொதுப் பார்வையாளராக திரு. நவநீத் குமார், I A S., (9489985879) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. நாயன்ஜோதி நாத், இ.வ.ப. (9489985876) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.
சாத்தூர் மற்றும் சிவகாசி: இப்பகுதிகளுக்குப் பொதுப் பார்வையாளராக திரு. அரவிந்த் மீனா, I A S . (9489985871) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. அனில்குமார், இ.வ.ப. (9489985875) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.
இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்: இப்பகுதிகளுக்குப் பொதுப் பார்வையாளராக திரு. உதயன் மிஷ்ரா, I A S . (9489985870) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. சுக்செயின் சிங், இ.வ.ப. (9489985874) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருவில்லிபுத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.
திருச்சுழி: இத்தொகுதிக்குப் பொதுப் பார்வையாளராக திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S . (9489985873) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. வாக்மரே ஜெய், இ.வ.ப. (9489985877) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அருப்புக்கோட்டை பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.
மாவட்ட ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர்:
மாவட்டம் முழுமைக்குமான காவல் துறை கண்காணிப்புப் பணிகளுக்காக திரு. அகிலேஷ் குமார் சௌராசியா, இ.கா.ப. (94899 85878) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிவகாசி பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளார்.
பொதுமக்கள் கவனத்திற்கு:
தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அந்தந்தத் தொகுதிக்குரிய பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள் வாயிலாகத் தெரிவிக்கலாம்.
மேலும், தினமும் காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை அந்தந்த முகாம் அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் பார்வையாளர்களைச் சந்தித்து முறையிடலாம்.
தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பார்வையாளர்களும் வருகை தந்துள்ளதால், தேர்தல் பணிகள் எவ்விதக் குறைபாடுகளுமின்றி நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
0
Leave a Reply