25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


மாவட்ட சமூகநல அலுவலகம் சார்பில், 2026 ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட உள்ள திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெற தகுதியானவர்கள்  விண்ணபிக்கலாம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட சமூகநல அலுவலகம் சார்பில், 2026 ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட உள்ள திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெற தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம் .

2026 -ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன் மாதிரி விருதானது, திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ம் தேதி தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கீழ்கண்ட தகுதிகளையுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விருதின் பெயர் திருநங்கையருக்கான முன் மாதிரி விருது

தகுதிகள்:
1. திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.
2. குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும்.
3. திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.
4. இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் (https://awards.tn.gov.in)  இணையதளம்  மற்றும்  நேரில்  சமர்ப்பிக்க  வேண்டும்.

விண்ணப்பதாரரின் கையேட்டில் இணைக்கப்பட வேண்டியவை:

1. பொருளடக்கம் மற்றும் பக்க எண்.
2. உயிர் தரவு (Bio Data) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2
3. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பரிந்துரைக்கடிதம்
4. மாவட்ட சமூகநல அலுவலரின் பரிந்துரைக் கடிதம்
5. சுயசரிதை
6. தனியரை பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்) -Soft & Hard Copy
7. தனியர் பெற்ற விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம்/விருதின் பெயர்/ யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்).
8. சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்).
9. சேவையை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு.
10. சேவையாற்றியதற்கான வரிவான அறிக்கை
11. சமூக சேவையாளரின்/சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக    பயனாளிகள் பயனடைந்த விவரம்.
12. சமூக பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று.
13. இணைப்பு படிவம் தமிழில் (மருதம் எழுத்துருவில்) முழுமையாக பூர்த்தி செய்து soft Copy & Hard Copy அனுப்பப்பட வேண்டும்.
14. கையேடு (Booklet)  தமிழில் அச்சு(Print)  செய்யப்பட்டு தலா 2 நகல்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் அனுப்பப்பட வேண்டும்.

        திருநங்கையை அங்கீகரிக்கும் பொருட்டு இவ்விருது வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள்: 18.02.2026 ஆகும். இறுதி நாளிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்க ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
     
மேலும், 20.02.2026-க்குள் கருத்துருக்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் 04562-252701 தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தொவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News