25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர்  அவர்கள் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சட்ட மேதையான அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் (14.04.2026) அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சமத்துவ உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்  (13.04.2026) அனைத்து அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-14ஆம் நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது,ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து, அனைவரிடமும் சமத்துவம், சகோதரத்துவம், மற்றும் சமூக நீதி நிலவுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு சமத்துவ நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் சாதி வேறுபாடுகளுக்கெதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி, ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News