குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 14.11.2025 அன்று ”குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” மற்றும் என் நாள் - என் உரிமை (My Day, My Rights)“என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது.
மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலனை கருத்தில்கொண்டு “ தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14“-யினை முன்னிட்டு 14.11.2025 அன்று காலை 10.00 மணியளவில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசபந்து மைதானத்திலிருந்து ”குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” - ”என் நாள் - என் உரிமை (My Day, My Rights)“ என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கையெழுத்து பிரச்சாரம், விழிப்புணர்வு பேரணி மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இப்பேரணியின்போது குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்தல், கல்வியின் அவசியம் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து தெருக்கூத்து கலைக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளில் தொடர்புடைய அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கையாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே இவ்விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ளலாம். இப்பேரணியில் கலந்து கொள்பவர்கள் நீலநிற (Blue) உடை அணிந்து பங்கேற்றவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply