25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


தேசிய வாக்காளர் தினம்-2026 னை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர்அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய வாக்காளர் தினம்-2026 னை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர்அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (23.01.2026) தேசிய வாக்காளர் தினம்-2026 னை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட 1950-சனவரி-25 தினத்தினை சிறப்பிக்கும் பொருட்டு, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சனவரி-25 தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது.அதனடிப்படையில், மாவட்ட அளவில் பல்வேறு வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 அதன் ஒரு பகுதியாக, தேசிய வாக்காளர் தினம்-2026 னை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “எனது இந்தியா” என்ற தலைப்பில் “இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் இந்திய குடிமகன்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு,மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம் என்ற உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News