15-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (25.01.2025) 15-ஆவது தேசிய வாக்காளர் தினம் - 2025 -ஐ முன்னிட்டு, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம், கருமாதிமடம், அல்லம்பட்டி முக்கு, அரசு மருத்துவமனை, மாரியம்மன் கோவில், பழைய பேருந்து நிலையம், பர்மா காலனி, ஆத்துப்பாலம், சிவகாசி பாலம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்று பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முன்னதாக, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
பின்னர், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவில் நடத்தப்பட்ட சுவர் பதாகை தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற இராஜபாளையம் அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி.ரம்யா என்பவருக்கு முதல் பரிசாக ரூ.2000/-மும், சாத்தூர் கம்ம மகாஜன டிரஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி. அட்சயா ஸ்ரீ என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.1000/-மும், சாத்தூர் கம்ம மகாஜன டிரஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி செல்வி.திவ்ய சரஸ்வதி என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.500/-ம்,
கல்லூரி மாணவர்களுக்கான சுவர் பதாகை தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரி மாணவி செல்வி. மோகன கிருத்திகா என்பவருக்கு முதல் பரிசாக ரூ.2000/-மும், இராஜபாளையம் ஏ.கே.டி.ஆர். பெண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவி செல்வி.விஜயலெட்சுமி என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.1000/-மும், சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவி செல்வி.மகாலெட்சுமி என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.500/-ம்,
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற திருவில்லிபுத்தூர் சிவம் சக்தி சுய உதவிக்குழுவிற்கு முதல் பரிசாக ரூ.5000/-மும், திருச்சுழி மல்லிகை சுய உதவிக்குழுவிற்கு இரண்டாம் பரிசாக ரூ.4000/-மும், காரியாபட்டி சுதா காளியம்மன் சுய உதவிக்குழுவிற்கு மூன்றாம் பரிசாக ரூ.3000/-மும் என ஆக மொத்தம் ரூ.19,000/- மதிப்பிலான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply