25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்  திறப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் திறப்பு.

  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (26.02.2026) காணொலி காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மொத்தம் ரூ.17.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் புதிய பாலம் மற்றும் உட்கட்டமைப்பு கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பழமையான திருக்கோயில்களை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்தல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.மேலும், சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதன்படி, இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ரூ.10.50 கோடி மதிப்பில் திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், ரூ.2.04 கோடி மதிப்பில் நான்கு சுகாதார வளாகங்கள் மற்றும் குளியலறைகள், ரூ.1.40 கோடி மதிப்பில் உட்பிரகார மண்டபத்தில் கான்கிரீட் தூண்களில் அலங்கார சுதை வேலைப்பாடுகள், ரூ.1.58 கோடி மதிப்பில் கோவிலுக்கு வரும் வழியில் 3 இடங்களில் நுழைவுத் தோரண வாயில்கள் மற்றும் கலையரங்கம், ரூ.2.16 கோடி மதிப்பில் வெளிப்பிரகார மண்டபத்தில் கான்கிரீட் தூண்களில் அலங்கார சுதை வேலைப்பாடுகள் மற்றும் சாலைப் பணிகள் ஆகிய மொத்தம் 6 முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ரூ.17.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News