25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


.பன்னீர் மிளகு வறுவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.பன்னீர் மிளகு வறுவல்.

பன்னீர் மிளகு வறுவல் (Paneer Pepper Fry) என்பது 15-20 நிமிடங்களில் செய்யக்கூடிய, பொரித்த பன்னீர்துண்டுகளை வெங்காயம், குடைமிளகாய் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வறுக்கப்படும் சுவையான ஒரு Sidedish  ஆகும். இது சப்பாத்தி, புலாவ், மற்றும் தயிர் சாதத்திற்கு மிகச்சிறந்த இணையாகும். 
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம் (சதுர வடிவில் நறுக்கியது)
மிளகுத்தூள் - 1-2 டீஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1/4 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கார்ன் பிளவர்/மைதா - தலா 1-2 மேசைக்கரண்டி (விருப்பப்பட்டால் - பன்னீரை கோட்டிங் செய்து பொரிக்க)
எண்ணெய், உப்பு - தேவையான அளவு 
செய்முறை:
பன்னீர் துண்டுகளை அப்படியே வறுக்கலாம் அல்லது கார்ன் பிளவர், மிளகுத்தூள், உப்பு கலந்த கலவையில்
முக்கி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து தனியே வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகுத்தூள், கரம்
மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும்.
வறுத்து வைத்த பன்னீர் துண்டுகளைச் சேர்த்து, மசாலா பன்னீரில் ஒட்டும் வரை நன்கு கிளறி, கடைசியாக
கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும். 
பன்னீர் மிகவும் மென்மையாக இருக்க, வறுத்த பின் சிறிது நேரம் வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து
பின்னர் மசாலாவில் சேர்க்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News