25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


'பாரா' ஆசிய விளையாட்டு போட்டி (ஜப்பான்).
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'பாரா' ஆசிய விளையாட்டு போட்டி (ஜப்பான்).

இரண்டாவது நாளான நேற்று இந்தியா ஒரே நாளில் 5 தங்கம், 6 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைக் கைப்பற்றியது. (தடகளத்தில் மட்டும் 14 பதக்கங்கள் கிடைத்தன).

நிஷாத் குமார் (உயரம் தாண்டுதல் - T47): 2.04 மீ. உயரம் தாண்டி பாரா ஆசிய சாதனையுடன் தங்கம் வென்றார். இத்தொடரில் இவர் வெல்லும் 2வது தங்கம் இதுவாகும்.

தீப்தி ஜீவன்ஜி (400 மீ. ஓட்டம் - T20): 56.36 வினாடிகளில் இலக்கை அடைந்து, புதிய சாதனையுடன் தங்கம் வென்றார்.

சிம்ரன் சர்மா (200 மீ. ஓட்டம் - T12): 24.80 வினாடிகளில் வந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

பிரனவ் சூர்மா (வட்டு எறிதல் - F51/52/53): 11.66 மீ. தூரம் எறிந்து தங்கம் வென்றார். இதே பிரிவில் ராம் ரத்தன் சிங் வெள்ளி வென்றார்.

ஈட்டி எறிதல் (F53/54): பிரதீப் குமார் (27.45 மீ.) வெள்ளிப் பதக்கமும், ஆயுஷ் வர்மா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

துப்பாக்கிச் சுடுதல் (10 மீ. ஏர் ரைபிள்): மணிஷ் நார்வல் 233.7 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News