விருதுநகர் மாவட்டஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர் மாவட்டஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் தலைமையில் (19.08.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டாமாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர் 2 நபர்களுக்கு தலா ரூ.3,00,000/- மதிப்பிலும், சாலை விபத்தில் காயமடைந்த 2 நபர்களுக்கு தலா ரூ.50,000/- மதிப்பிலும் என ஆக மொத்தம் 4 நபர்களுக்கு ரூ.7 இலட்சம் மதிப்பிலான நிவாராணத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு தலா ரூ.4,870/- மதிப்பில் இலவச தேய்ப்பு பெட்டிகளையும், 18 பயனாளிக்கு தலா ரூ.6,000/- மதிப்பில் தையல் இயந்திரங்களையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களையும் என 33 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,71,310/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் மூலம் முன்னேற விழையும் மாவட்டத்தின் சங்கல்ப் திட்டத்தின் மூலமாக குறுகிய கால திறன் பயிற்சிகளான சிறுதானிய மதிப்புக்கூட்டல் உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்றவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply