ஆமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2030ல் நடத்த அனுமதி.
காமன்வெல்த் விளை யாட்டு கூட்டமைப்பு சார்பில், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன் வெல்த் விளையாட்டு நடத்தப்படுகிறது. இதன் 23வது சீசன், அடுத்த ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடக்கவுள்ளது. கடை சியாக, 2022ல் இங்கி லாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்தது.. வரும் 2030ல், 24வது காமன் வெல்த் விளையாட்டை நடத்திட இந்தியா (ஆம தாபாத்), நைஜீரியா (அபுஜா) நாடுகள் விருப்பம் தெரிவித்தன.
நேற்று, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு பொதுக்குழு கூட்டத்தில், வரும் 2030ல் போட்டியை இந்தியாவில் நடத்த முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது. வரும் 2034ல் இப் போட்டியை நடத்தும் உரிமம் ஆப்ரிக்க நாடுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காமன் வெல்த் விளையாட்டு நடத்தும் 2வது இந்திய நகரமானது ஆமதாபாத். ஏற்கனவே 2010ல் டில்லியில் நடந்தது.
0
Leave a Reply