25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின், மனுக்கள் குழுவிடம், தீர்க்கப்பட வேண்டிய பொதுப்பிரச்சனைகள், குறைகள் குறித்து மனுக்களை 30.11.2026-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின், மனுக்கள் குழுவிடம், தீர்க்கப்பட வேண்டிய பொதுப்பிரச்சனைகள், குறைகள் குறித்து மனுக்களை 30.11.2026-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் .

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2026-2027-ஆம் ஆண்டுகளுக்கான மனுக்கள் குழு விருதுநகர் மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதில் அரசு தலைமை கொறடா திரு.ரா.சபரிநாதன் அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி அ.குழந்தை ராணிநாச்சியார் அவர்கள், என்.எம்.சுகுமார் அவர்கள், திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள், டாக்டர் நா.திருப்பதி அவர்கள், திரு.கே.நித்தியானந்தன் அவர்கள், திரு.ஆர்.பிரகாசம் அவர்கள், திரு.ரா.மணி அவர்கள், திரு.ஜ.முனிரத்தினம் அவர்கள், திரு.ஜி.ஆர்.வசந்தவேல் அவர்கள், திருமதி லா.ஜெயசுதா லட்சும்காந்தன் அவர்கள் ஆகிய உறுப்பினர்களை கொண்ட மனுக்கள் குழு வருகை தர உள்ளது.

விருதுநகர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொதுப்பிரச்சனைகள், குறைகள் குறித்து மனுக்களை(மூன்று நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர்/ மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு, தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப்பேரவை, சென்னை 600 009" என்ற முகவரிக்கு 30.11.2026-ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்திட வேண்டும்.மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருத்தல் வேண்டும். மனுக்கள் ஒரேயொரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

ஆனால், மனுவில் உள்ள பொருள் தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப்பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்றவை குறித்து இருத்தல் கூடாது.சட்டமன்றப் பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும். அவ்வமயம், மனுதாரர் முன்னிலையில், குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இதுகுறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பி வைக்கப்படும். 30.11.2026-ஆம் தேதிக்குப் பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News