பூவரசன் மரம்......
பூவரசு மரத்தின் இலை, காய்களை பறித்து நன்கு சுத்தபடித்துவிட்டு அதனை நன்கு பசைபோல் அரைத்து உங்கள் உடலில் உள்ள தேமல்களின் மீது தடவி வருவதன் மூலம் தேமல் குணமாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் அது குணமாகாது . அவர்களும் இந்த பூவரசு மரத்தின் பட்டையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வைத்து புண்கள் உள்ள இடங்களை கழுவி வருவதன் மூலம் அந்த புண்கள் குணமாகும்.
பூவரசு மரத்தின் வேர்ப்பட்டை பறங்கிப்பட்டை இரண்டையும் சம அளவு எடுத்துபசும் பாலில் அவித்து வெய்யிலில் காயவைத்து பொடி செய்யவும். இதில், ஐந்துகிராம் பொடியை தயிர் அல்லது மோர் அல்லது பசு வெண்ணெய்யில் கலந்து மதியவேளையில் சாப்பிட்டு வந்தால் 60 நாள்களில் குஷ்ட நோய் குணமாகும்.
பெண்களுக்கு கழுத்தில் நகைகள் அணிவதினால் கருப்பு நிறத்தில் இருக்கும். அதற்கு இந்த பூவரசு மரத்தின் பூக்களை நல்லெண்ணெயுடன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை வடிக்கட்டி அந்த எண்ணெயை தடவி வருவதன் மூலம் அந்த கருப்பு நிறம் விரைவில் மறைந்து விடும்.
பூவரசு மரத்தின் இலையை வெய்யிலில் உலர்த்தி எரித்து, சாம்பலை தேங்காய் எண்ணெய்யில் குழைத்து சொறி, சிரங்குகளில் தடவி வந்தால் குணம் பெறலாம்.
பூவரசு மரத்தின் வேர்ப் பட்டையைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி. அதில் ஆமணக்கு எண்ணெய் 25 மில்லி சேர்த்து குடித்தால் பேதி குணமாகும்.
0
Leave a Reply