திருவில்லிபுத்தூர் வட்டம், அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில், அதிகளவு மரக்கன்றுகள் நடும் பணி
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டம், அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் பசுமை விருதுநகர் இணைந்து செயல்படுத்தும் அதிகளவு மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (13.08.2024) தொடங்கி வைத்தார்.பின்னர், அத்திக்குளம் தேய்வேந்தரி கிராமத்தில், வேளாண்மைத்துறையின் மூலம் விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் திட்டத்தின்கீழ், 5 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1000 மகோகனி மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அத்திக்குளம் தேய்வேந்தரி கிராமத்தில், வேளாண்மைத்துறையின் மூலம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை 50 சதவீகித மானியத்திலும், மாநில வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்; துவரை ஊடுபயிர் சாகுபடிக்கு துவரை விதைகளையும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதைகளையும், வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாடி தோட்டம் அமைப்பதற்கான தொகுப்புகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அதனை தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் வட்டம், வன்னியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, அங்கு சிகிச்சை பெற வரும் புறநோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்களிடம் சுகாதார நிலையத்தில் வழங்கப்படும் சேவைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் திருவில்லிபுத்தூரில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரம், பூச்சிக்கொல்லி மற்றும் இடுபொருட்கள் கண்காட்சியினை பார்வையிட்டார்.இந்த நிகழ்வுகளின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், மாவட்ட சுகாதார அலுவலர்(பொ) (சிவகாசி) மரு.யசோதாமணி, வேளாண்மைத்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply