25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


உலக 'ரேபிட்' செஸ் தொடரில் வெண்கலம் வென்ற ,இந்தியாவின் அர்ஜுன், ஹம்பிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக 'ரேபிட்' செஸ் தொடரில் வெண்கலம் வென்ற ,இந்தியாவின் அர்ஜுன், ஹம்பிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

.கத்தார் தலைநகர் தோகாவில், உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்' 'பிளிட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது.முதலில் 'ரேபிட்' பிரிவு போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி 38,  ஓபன் பிரிவில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 22, வெண்கலம் கைப்பற்றினர்.

உலக 'ரேபிட்' பிரிவில் 5 பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார் ஹம்பி.ஏற்கனவே 2 தங்கம் (2019, 2024), ஒரு வெள்ளி (2023), ஒரு வெண்கலம் (2012) வென்றிருந்தார். விஸ்வநாதன் ஆனந்திற்கு பின், இத்தொடரில் பதக்கம் கைப்பற்றிய 2வது இந்திய வீரரானார்.  

இப்போட்டி மீதான இவர்களது அர்ப்பணிப்பு பாராட்டத் தக்கது. இவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்,' என, அர்ஜுன், ஹம்பிக்கு  பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News