25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் (30.09.2026) வழங்கப்பட்டது.முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், 2026-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவு 06.08.2026 அன்று துவங்கப்பட்டது. இதில் 45,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் முன்பதிவு செய்தனர். மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷூ (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீர்விளையாட்டுக்களான கயாக்யிங் (Kayaking) மற்றும் கேனோயிங் (Canoeing) போன்ற புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கம் உட்பட மொத்தம் 9 இடங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 09.09.2026 முதல் 30.09.2026 வரை நடத்தப்பட்டது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என மொத்தம் 20,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.மேலும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல் பரிசுத்தொகையாக தலா ரூ.3,000/-ம் இரண்டாம் பரிசுத்தொகையாக தலா ரூ.2,000/-ம் மற்றும் மூன்றாம் பரிசுத்தொகையாக தலா -ரூ.1,000/-ம் வழங்கப்பட்டது.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலான முதலமமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தகுதி பெறுவர்.கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் 1 தங்கப்பதக்கமும், 3 வெள்ளிப்பதக்கம், 6 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 10 பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்த 2026 ஆம் ஆண்டிற்கு மாநில அளவிலான போட்டிக்கு பள்ளிகள் பிரிவில் 308 மாணவர்களும், கல்லூரி பிரிவில் 304 மாணவர்களும், பொதுப்பிரிவில் 148 நபர்களும், அரசு அலுவலர்கள் பிரிவில் 76 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 70 மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்கள் என மொத்தம் 906 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். வீரர்கள் தங்களது முழுத்திறனை வெளிக்கொணர்ந்து அதிகப்படியான போட்டிகளில் வெற்றி பெற்று உங்களது குடும்பத்திற்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திடவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமாரபாண்டியன், பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News