முள்ளங்கி சட்னி (Radish Chutney).
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 1 (துருவியது அல்லது நறுக்கியது),
கடலை பருப்பு - 1 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 10 (அல்லது பெரிய வெங்காயம் - 1),
தக்காளி - 1 (நறுக்கியது),
வரமிளகாய் - 4 அல்லது 5,
பூண்டு - 4 பல்,
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு,
கடுகு, கருவேப்பிலை – தாளிக்க.
செய்முறை :
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கிய பின், நறுக்கி வைத்துள்ள முள்ளங்கியை சேர்த்துஅதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
கடைசியில் தேங்காய் துருவல் மற்றும் புளி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
கலவை ஆறியதும், தேவையான உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கருவேப்பிலை தாளித்து சட்னியில் கொட்டவும்.இது இட்லி மற்றும் தோசைக்கு மிக அருமையான சைட் டிஷ் ஆகும்.
0
Leave a Reply