25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


ஆனைக்குட்டம் அணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆனைக்குட்டம் அணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தில் உள்ள ஆனைக்குட்டம் அணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள்(18.09.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்திற்குட்பட்ட ஆனைக்குட்டம் கிராமத்தில் அர்ஜீனா நதியின் குறுக்கே 1987-ஆம் ஆண்டு  கட்டப்பட்டுள்ள அணை ஆனைக்குட்டம் அணையாகும். இந்த அணையானது 591 ச.கி.மீ நீர்வரத்துப்பகுதி உடனும், 2,940 மீ நீளத்தில் 9 நீர் வெளியேற்றும் மதகுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.   இந்த அணையின் மொத்த நீர்பிடிப்பு பரப்பானது 795.26 சதுர கிலோமீட்டர் ஆகும்.  இந்த அணையில் 125.752 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் அதிகபட்சமாக 1,708 க.மீ நீரினை வெளியேற்ற இயலும்.

இந்த அணையின் கீழ் பகுதியில் 5.1 கி.மீ நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதான கால்வாயின் வாயிலாக சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த 771.77 ஹெக்டர் விவசாய நிலங்களும், விருதுநகர் வட்டம், முத்துலிங்காபுரத்தில் 356.48 ஹெக்டர் நிலங்களும், வாடி கிராமத்தில் 45.82 ஹெக்டர் நிலங்கள் என 1174.07 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் முதல் போகத்திற்கு 1,500 ஏக்கர்  நிலமும், இரண்டாம் போகத்தில் 3,000 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும்.இந்த அணையில் பராமரிக்கப்படும் மதகுகள், நீர்த்தேக்கப்பகுதிகள், பிரதான கால்வாய் பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் திருமதி மலர்விழி, (வைப்பார் வடி நில கோட்டம்) உதவி செயற்பொறியாளர் திரு.கார்த்திகேயன், உதவி பொறியாளர் திரு.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News