தூதுவளை சட்னி.
தேவையான பொருட்கள்:
தூதுவளை இலைகள் - 1 கப் (முட்களை நீக்கியது),
சின்ன வெங்காயம் - 1/4 கப்,
பூண்டு - 6 பற்கள்,
காய்ந்த மிளகாய் – 3,
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்,
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்,
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,
தேங்காய் துருவியது - 2 ஸ்பூன்,
நல்லெண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு,
செய்முறை :
முதலில் தூதுவளை இலைகளில் உள்ள முட்களை நறுக்கிவிட்டு, இலைகளை நன்றாகக் கழுவி வைத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி தனியாக எடுக்கவும்.
அதே கடாயில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு கழுவி வைத்துள்ள தூதுவளை இலைகளைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி எடுக்கவும்.
வதக்கிய பொருட்கள் ஆறியதும், அதனுடன் புளி, தேங்காய், தேவையான உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது சுவையான மற்றும் சளி இருமலைப் போக்கும் ஆரோக்கியமான தூதுவளை சட்னி தயார். சூடான சாதம் அல்லது இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.
0
Leave a Reply