ஆசிய விளையாட்டு இன்று தொடக்க விழா.
ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப். 19 முதல் அக். 4-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தியா சார்பில் 35 போட்டிகளில் 501 பேர் (267 வீரர்கள், 234 வீராங்கனைகள்) பங்கேற்க உள்ளனர்.
இதில் பங்கேற்கும் நாடுகளை வரவேற்கும் விதமாக, தொடக்க விழாவுக்கு முன்பாக நேற்று மதியம் 1.30 மணிக்கு இந்தியா, ஏமன், வட கொரியா உள்ளிட்ட நாடுகளின் கொடிகள் ஏற்றப்பட்டன.
இன்று நடைபெறும் ஆசிய விளையாட்டு தொடக்க விழா அணிவகுப்பில், இந்திய மூவர்ணக் கொடியை இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற மனு பாகர் (துப்பாக்கிச் சுடுதல்), கடந்த இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்) ஆகியோர் ஏந்திச் செல்ல உள்ளனர்.
தஜிந்தர்பால் சிங் தூர் கூறுகையில், “இந்தியக் கொடியை ஏந்திச் செல்வதை பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.
0
Leave a Reply