25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இரவு கடைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க ராஜபாளைய  வணிகர்கள் எதிர்பார்ப்பு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இரவு கடைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க ராஜபாளைய வணிகர்கள் எதிர்பார்ப்பு!

 ராஜபாளையம் வணிகர்கள் ,வணிக நிறுவனங்கள் அதிக வாடகை வசூலிக்கப்படுவதை சமாளிக்க கடைகளின் திறப்பு நேரத்தை 24 மணி நேரமும் திறந்து வைக்க தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை கொடுத்துள்ளனர். 

அதிக சொத்து வரி விதிப்பிற்கு, மாநில அளவில் கீழ்வரும் முதல் மூன்று நகராட்சிகளில் ராஜபாளையம் முக்கிய இடம் பிடித்துள்ளது. கடை உரிமையாளர்கள், வணிகம் நடத்துபவர்களிடம் வாடகையை உயர்த்தி வசூலிப்பதால் தொழில் நடத்துவதில் சிரமம் எதிர்கொள்கின்றனர்.

பாதுகாப்பை காரணம் காட்டி இரவு 11:00 மணிக்கு மேல் கடையை அடைக்க போலீசார் கெடு பிடி விதித்து வரும் நிலையில் தமிழக அரசு இம்மாதம் ஜூன் 4 முதல் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.போலீசார் பாதுகாப்பு பற்றாக்குறையை காரணம் கூறி ராஜபாளையத்தில் இரவு 11:00 மணிக்கு மேல் அனுமதிக்க மறுப்பதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.

ஏற்கனவே மாநில அளவில் உயர் வரி விகிதம் விதிக்கப்பட்டும், தொடர்ந்து மின் கட்டண உயர்வு விதிப்பு போன்ற வற்றால் நிலையற்ற தன்மையை சந்தித்து வரும் சூழலில் 24 மணி நேரம் திறக்க விருப்பப்படும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அரசு விதி முறைகளுக்கு உட்பட்டு தடை ஏற்படுத்த கூடாது என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News