ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் .
ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமம், பூர்ணா ஹுதி தீபாராதனை, முதல் காலயாக சாலை பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை 9:00 மணிக்கு வேத கால பாராயணம் 2ம் யாக பூஜைகளுக்கு பின் விநாயகர், சப்த கன்னி மார், பெருமாள், லாட சன்னாசி, கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் மகா தீப ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. அன்ன தானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கன்னிமார் கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
0
Leave a Reply