அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை
2024-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர் / அருப்புக்கோட்டை / சாத்தூர் / திருச்சுழி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) 01.07.2024 முதல் 15.07.2024 வரை நடைபெறுகிறது.
ஏற்கனவே விண்ணப்பித்து ஒதுக்கீடு கிடைக்கப்பெறாதாவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவ/ மாணவிகள், அரசு நிர்ணயித்துள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவுகளான
1. Fitter
2. Industrial Robotics and Digital manufacturing Technician
3. Turner
4. Fire Technology and Industrial Safety Management
5. Machinist
6. Refrigeration and Air Conditioning Technician
7. Wireman
8. Interior Design and Decoration
9. Welder
10. Motor Mechanic Vehicle
11. Surveyor
12. Mechanic Electric Vehicle
13. Advanced CNC Mechanic Technician
ஆகிய பயிற்சிகளுக்கு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை அணுகி நேரடி சேர்க்கை மூலம் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கொள்ளலாம்.பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக்கருவிகள், காலணி, பஸ் பாஸ் வழங்கப்படும். மேலும் மாதந்திர உதவித்தொகை ரூ.750/- மேலும் அரசு பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்தபின், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply