நுண்கிருமிகளை வெளியேற்றும் செண்பக பூக்கள்
செண்பக மரத்தின் விதை, வேர், பட்டை எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.. முக்கியமாக, அல்கலாய்டுகள்,ஒலியிக் சினாயிக், பால்மிடிக் போன்ற பொருட்கள்தான், இந்த மரத்தின் ஸ்பெஷலாட்டியாக இருக்கின்றன.கண்ணில் நீர்வடிதல், கண்வலி, எரிச்சல், இமைகள் ஒட்டிக்கொள்ளுதல், கிருமித்தொற்று, போன்ற கண்களை பாதிக்கும் அத்தனை பிரச்சனைக்கும் இந்த் பூக்கள் பயன்படுகின்றன.
நுண்கிருமிகளை வெளியேற்றும் திறன், இந்த செண்பக பூக்களுக்கு உண்டு. செண்பக மரத்தின் பூக்களை பொருத்தவரை, கண்நோய் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.. இந்த பூக்களில், பீட்டா சைட்டோஸ்டீரால், லிரியோடினின், மோனோசெஸ்குட்டிர்பின் போன்றவையே கிருமிநாசினியாக பயன்பட தூண்டுகோலாகின்றன. எப்படி பயன்படுத்தலாம்: செண்பகப்பூக்களை, அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து நீர்விட்டு அரைத்து, அந்த விழுதை கண் இமைகளின் மேலும், கீழும் பற்று போல போட வேண்டும். ஒருமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால், கண் ஆரோக்கியம் காக்கப்படும்.. அல்லது, இந்த பூக்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, 3 மணி நேரம் கழித்து, அந்த தண்ணீரில் கண்களை கழுவி வரலாம்..
இந்த பூக்களை தண்ணீரில் ஊறவைத்து எடுத்த பிறகு, சிறிது இதனுடன் திரிபலா சூரணத்தை சேர்த்து கலக்கியும் கண்களை கழுவி வரலாம். வைரஸ், பாக்டீரியாக்களால் உண்டாகும் காய்ச்சலை விரட்ட இந்த பூக்கள் உதவுகின்றன. சிறுநீர்க்கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற உஷ்ண கோளாறுக்கும் இந்த பூக்கள்தான் உதவுகின்றன. உடலுள்ள பித்தத்தை நீக்கவும், இந்த பூக்கள்தான் பயன்படுகின்றன. நரம்பு தளர்ச்சி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், போன்ற குறைபாடுகளுக்கும் இந்த பூக்களே பயன்படுகின்றன.
பூக்களை கொண்டு கஷாயம் செய்யலாம் அல்லது நிழலில் உலர்த்தி, பவுடர் தயாரித்து, தேனுடன் கலந்தும் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தாலோ அல்லது மன உளைச்சலால் நன்றாக தூக்கம் வரவில்லையானாலோ இந்த செண்பக பூக்களே கைகொடுக்கின்றன.
2 பூக்களை எடுத்து, சிறிது கசகசா, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து மையாக அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி பால் சேர்த்து இரவு தூங்கப்போகும் முன்பு குடித்தால், மேற்கண்ட கோளாறுகள் எல்லாமே தீரும்.. பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கும், இந்த செண்பகப் பூ கஷாயம் உதவுகிறது. செண்பக பூக்களை அரைத்து விழுதாக்கி, அதனை நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி சூடு ஆறியதும் வடிகட்டி எடுத்து வைத்து கொண்டால், உடலில் எங்கு வலி ஏற்பட்டாலும் தேய்க்கலாம்.. வீக்கம், கைகால் எரிச்சல், மூட்டு வலி, முழங்கால்வலி, தலைவலி என அனைத்து வலிகளுக்குமே பூசினால், நிவாரணம் கிடைக்கும்.
0
Leave a Reply