ஐ.பி.எல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு ( ரூ.27 கோடி ) ஒப்பந்தமான ரிஷாப் பன்ட்
இந்தியன் பிரிமியர் லீக் IPL 18வது சீசன், அடுத்த ஆண்டு மார்ச் 14-ல் துவங்குகிறது. இதற்கான வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று துவங்கியது. இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட் ஏலத்தில் வந்தார். அடிப்படை ஏலத்தொகை ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்ட இவரை வாங்க லக்னோ, பெங்களுரு, ஐதராபாத் அணிகள் முன்வந்தன. முடிவில் இவருக்கு ரூ.20.75 கோடி கொடுக்க லக்னோ அணி தயாராக இருந்தது. அப்போது டில்லி அணி “ ரைட் டு மேட்ச்” கார்டை பயன்படுத்தியது. லக்னோ அணி, இவருக்கு அதிகபட்சம் ரூ.27 கோடி கொடுக்க முன்வந்தது. டில்லி அணி விலகிக் கொள்ள, ரூ.27 கோடிக்கு லக்னோ அணியில் இணைந்தார். ரிஷாப் பன்ட், இதன்மூலம் ஐ.பி.எல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு ஒப்பந்தமான வீரரானார்.
0
Leave a Reply