25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழகத்தின் ரீகன் தேசிய போல் வால்ட் போட்டியில், தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழகத்தின் ரீகன் தேசிய போல் வால்ட் போட்டியில், தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார்.

தேசிய உள்ளரங்கு தடகள சாம்பி யன்ஷிப், இந்தியாவில் முதன் முறையாக, புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில்,.நேற்று இரண்டாவது,கடைசி  நாள் ஆண்களுக்கான போல் வால்ட் போட்டிகள் நடந்தது. தமிழகத்தின் ரீகன் கணேசன், 5.30 மீ., உயரம் தாவி, புதிய தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார்.ராம்பீர் சிங் (4.85 மீ.,), பினீஷ் ஜேக்கப் (4.55) அடுத்த இரு இடம் பெற்றனர்.

 

தமிழகத்தின் ராபின்சன் ஆண்களுக்கான 'டிரி பில் ஜம்ப் 'போட்டியில் (14.67 மீ.,) இரண்டாவது இடம் பெற்று, வெள்ளி வென்றார். பெண்களுக்கான உயரம் தாண்டுதலில்,மூன்றாவது வாய்ப்பில் 1.71 மீ., தாவிய தமிழக வீராங்கனை கெவினா, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். முதல் வாய்ப்பில் குஜராத்தின் பயல் (1.71)தங்கம் வென்றார்.

 தமிழகத்தின் சாய் சிந்தனா 20வயதுக்குட்பட்டபெண்களுக்கான 400மீ., ஓட்டத்தில் (59.96 வினாடி ) தங்கம் வென்றார்.

.உ.பி.,யின் சலோனி குமாரிபெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் (53.73) தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.  பஞ்சாப்பின் குரிந்தர்விர் சிங் ஆண்களுக்கான 60 மீ., ஓட்டத்தில் (6.60 வினாடி), தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News