விருதுநகர் மற்றும் திருச்சுழி வட்டங்களைச் சேர்ந்தவர்கள் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இ-சேவை மையம் அல்லது Citizen Portal (https://eservices.tn.gov.in/citizen) வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
“நத்தம் ஆவணங்கள் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்” தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 04.03.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் மற்றும் திருச்சுழி வட்டங்களில் நத்தம் ஆவணங்கள் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal (https://eservices.tn.gov.in/citizen) வழியாக விண்ணப்பிக்கலாம்.
அதனடிப்படையில், நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணைய வழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நத்தம் பட்டா வழங்கப்படும். மேலும் கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.நத்தம் இணையவழி பட்டா மாறுதல் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.எனவே, பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மற்றும் “தமிழ்நிலம்” செயலி மூலம் நிலஅளவைத் தொடர்பான விவரங்களைப் பார்வையிட்டுப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply