அரிசி,உளுந்து இனிப்பு போண்டா
தேவையானவை :
பச்சரிசி - 1 கப்
உளுந்து பருப்பு -1/2 கப்
சமையல் சோடா- ஒரு சிட்டிகை
உப்பு -ஒரு சிட்டிகை
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 3/4 கப்
எலுமிச்சை சாறு - 3 துளி
எண்ணெய்- பொரிப்பதற்கு
சிவப்பு கலர் -ஒரு சிட்டிகை
செய்முறை :
அரிசி மற்றும் உளுந்து பருப்பை 4 மணிநேரம் ஊறவைக்கவும்.ஊறவைத்த அரிசி , பருப்பை தண்ணீர் சேர்க்காமல் மைய அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன், உப்பு, சோடா, கலர் நன்றாக கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கலங்கும் வரை அதிக சூட்டில் கொதிக்கவிடவும். நெருப்பை குறைந்த சூட்டில் வைத்து ஒரு கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்துவிட்டு , எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கிவிடுங்கள்.
வாணலியில் எண்ணெய் சூடாக்கி , மாவு கலவையை சிறு உருண்டைகளாக எண்ணையில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். எண்ணெய் வடித்துவிட்டு சர்க்கரை பாகில் ஊறவைக்கவும்.ஒரு நாள் ஊறிய பின்பு ,வேறு பாத்திரத்தில் மாற்றி , ஒரு வாரம் வரை சுவைக்கலாம்
0
Leave a Reply