25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (13.01.2026) அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் குத்துவிளக்குயேற்றி துவக்கிவைத்தார்.

அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில், கோலப்போட்டி, சைக்கிள் போட்டி, பலூன் ஊதுதல், எலுமிச்சை கரண்டி நடை ஓட்டம், நினைவு திறன் போட்டி, லக்கி வின்னர், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, கண்கட்டி பானை உடைத்தல், நடனம், கவிதை வாசித்தல், நகைச்சுவை துணுக்குகள் சொல்லுதல், பாட்டுக்கு பாட்டு, கரகாட்டம், ஒயிலாட்டம், பரதம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக, கலை நிகழ்ச்சிகளுடன் மாவட்ட ஆட்சியர் அவர்களை வரவேற்று, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அலுவலர்கள் அனைவரும் பொங்கல் வைத்து, சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.மேலும், சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, பொங்கல் விழாவினை முன்னிட்டு, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள்.

அரசு அலுவலர்கள் சமத்துவ பொங்கல் விழாவில், தங்களது திறமைகளை வெளிப்படுத்தி போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர். இவ்விழாவில், அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி,திட்டஇயக்குநர்மாவட்டஊரகவளர்ச்சிமுகமை திரு.வீ.கேசவதாசன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News