சேமியா சர்க்கரை பொங்கல்
தேவையானவை : சேமியா - ஒரு கப், பாசிப்பருப்பு -அரை கப். வெல்லம்- ஒன்றரை கப், நெய் - அரை கப், முந்திரிப்பருப்பு -10. திராட்சை - 12, எலக்காய்தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை மலர வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.நெய்யில் பாதியை காயவைத்து முந்திரி, திராட்சை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து 2 கப் தண்ணீர் சேருங்கள். தண்ணீர் கொதித்ததும் சேமியாவை சேர்த்து நன்கு வேகவிடுங்கள். வெல்லத்தை பொடித்து. அரை கப் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு வடிகட்டி வெந்த சேமியாவில் சேருங்கள். அத்துடன் பாசிப்பருப்பையும் போட்டு, நன்கு சேர்ந்து வரும் வரை கிளறுங்கள். கடைசியில் ஏலக்காய்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.
0
Leave a Reply