25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு.

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குச் சென்று முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செலுத்தினர். புதுமணத் தம்பதியினர் கோயில்களில் சிறப்பு பூஜை செய்தனர். அம்மன் கோயில்களில் பெண்கள் மாங்கல்யக் கயிறு மாற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

ஆடிப்பெருக்கு நாளில் புதிய முயற்சிகளைத் தொடங்குவது வளர்ச்சியையும் வளத்தையும் தரும் என்ற நம்பிக்கையின்படி, பலர் பத்திரப்பதிவு, புதிய தொழில்கள் தொடங்குதல், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வாங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

வீடுகளில் பலர் தங்களது தோட்டங்களில் காய்கறி விதைகளை நட்டனர். விவசாயிகள் இறைவனை வழிபட்டு சாகுபடி பணிகளைத் தொடங்கினர்.

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில், பச்சமடம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி கோயில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News