25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடும் வகையிலான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடும் வகையிலான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஜே.சி.ரெசிடென்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடும் வகையிலான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு(04.03.2026 முதல் 06.03.2026 வரை) நிகழ்ச்சியின் 2 ஆவது நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் உரையாற்றினார்.

மத்திய, மாநில அரசுகளால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடும் வகையிலான சட்டங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துகின்ற முக்கிய பணிகளை அரசு அலுவலர்கள், பணியாளர்கள், களப்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.இந்த சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டால்தான், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட முடியும் என்ற நோக்கத்தில்தான் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மகளிர் உதவி எண்.181 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (OSC) மற்றும் காவலன் (SOS) செயலியின் மூலம் அவசர உதவியை வழங்குகிறது.

மேலும், குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் 2005, போஸ்கோ சட்டம் சட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் மற்றும் பெண்குழந்தை பாதுகாப்புச்சட்டம் போன்றவைகள் பெண்கள் மற்றும் நிதி உதவி அளித்து சமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது.இந்த அரசு திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து நன்கு அறிந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும்.எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு திட்டமான உயிர் திட்டத்தின் கீழ் சட்டத்திற்கு முரண்பட்ட சிறார்கள் (இளைஞர் நீதிக்குழுமம்) 7 நபர்களுக்கு சுயதொழில் புரிந்திட தேவையான உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி திரு.கே.ஜெயக்குமார், விருதுநகர் இளைஞர் நீதிக்குழுமம் முதன்மை நடுவர் திருமதி பி.எஸ்.ஏ.நிஷாந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மரு.க.பிரதௌஸ் பாத்திமா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, நன்னடத்தை அலுவலர் திரு,பால் இக்னேசியஸ் சேவியர்ராஜ், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News