சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.95 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள் மற்றும் சமுதாய கூட்டத்தினை திறந்து வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஜமீன் கொல்லம்கொண்டான் மற்றும் எஸ்.இராமலிங்காபுரம் கிராமத்தில் தலா ரூ.20 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் கோபாலபுரம் ஊராட்சி அங்கப்பநாயக்கன்பட்டியில் ரூ.45 இலட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் என மொத்தம் ரூ.95 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.தமிழ்நாடு அரசு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கருத்தில் கொண்டு, கிராமப்புறங்களில் கல்வி, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இப்புதிய அங்கன்வாடி மையங்கள் மற்றும் சமுதாய கூடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், ஜமீன் கொல்லம்கொண்டான் கிராமத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பிலும், எஸ்.இராமலிங்காபுரம் கிராமத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.40 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு அங்கன்வாடி மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.மேலும், கோபாலபுரம் ஊராட்சி அங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.45 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் அப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி, ஊட்டச்சத்து உணவு, சுகாதார பராமரிப்பு மற்றும் வளர்ச்சி கண்காணிப்பு உள்ளிட்ட அங்கன்வாடி மையத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகள் சிறப்பாக கிடைக்க வழிவகை ஏற்படும். மேலும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான கற்றல் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், அங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள சமுதாய கூடம் மூலம் அப்பகுதி பொதுமக்கள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சமூக, பொது மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை வசதியாக நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்வில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், இ.ஆ.ப., இணை இயக்குநர்(ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்), திட்ட இயக்குநர் திருமதி ஷீலா சுந்தரி, இராஜபாளையம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பங்கஜம் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply