25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சிவகாசி மற்றும் விருதுநகர் வட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் 329 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 2,837 மகளிர்களுக்கு ரூ.21.78 கோடி மதிப்பிலான கடனுதவிகளை  அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி மற்றும் விருதுநகர் வட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் 329 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 2,837 மகளிர்களுக்கு ரூ.21.78 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில், (25.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவிகள் வழங்கும் விழாவில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் சிவகாசி நகர்ப்புர மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள  148 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1,300 மகளிர்களுக்கு ரூ10.10 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.பின்னர், விருதுநகரில் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவிகள் வழங்கும் விழாவில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் விருதுநகர் நகர்ப்புர மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 181 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1,537 மகளிர்களுக்கு ரூ.11.68 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் சமூக முதலீட்டு நிதி, நுண்கடன், சுய உதவிக்குழு கடனுதவி போன்ற உதவிகளை பெற்று அதை மீண்டும் மீண்டும் பெருக்கி உங்களுக்கான மகளிர் தற்சார்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும்  தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசின் மூலம் தமிழ்நாட்டில் அணைகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளோடு, பொருளாதாரத்திலும் சமுதாயம் வளர்ந்து வருகிறது.2010 ஆம் ஆண்டிற்கு பிறகு ஏறத்தாழ 14 ஆண்டுகள் கழித்து, நம்முடைய முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில், தமிழ்நாடு சுமார் 11.2 சதவிகிதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநில பொருளாதார வளர்ச்சியும் இந்த அளவுக்கு இல்லை.பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று நான் பெருமையாக கூறுகிறேன். இந்த பெரிய பொருளாதார வளர்ச்சிக்கு நம்முடைய தொழில், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன.

தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய மாநிலமாக இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களிலும் பெண்கள் அதிகமான அளவில் தொழிற்சாலைகளில் சென்று வேலை செய்யக்கூடிய முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.இந்த பொருளாதார வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், பெண்கள் சமூக வளர்ச்சியில் மேலே வர வேண்டும். நம்முடைய சமுதாயம் மேலே வர வேண்டும். அந்த சமுதாயத்தின் மிக முக்கியமான பங்காக இருக்கக்கூடியவர்கள் பெண்களான உங்களை மேலே கை தூக்கி விட வேண்டும் என்று சொன்னால் உங்களுக்கான மரியாதையும், சம உரிமையும் வழங்க வேண்டும்.பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்று சட்டம் இயற்றப்பட்டது. ஆணுக்கு பெண் இழைத்தவள் அல்ல என்பதை சொல்வதற்காக உங்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.
மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், கடனுதவிகள் மூலம் பெண்களுக்கான பொருளாதார வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கிறது.விடியல் பயணம் என்பதன் நோக்கம் என்றால் வீட்டில் இருந்து ஒரு பெண் தைரியமாக படிப்பதற்கு, வேலைக்கு, தன்னுடைய சுய காரியங்களுக்காக செல்வதற்கு தைரியம் வர வேண்டும் என்பதற்குதான்.

. இந்த மகளிர் பயணத்தின் மூலமாக என்னுடைய ஒவ்வொரு சகோதரிகளுக்கும் அவர்கள் கையில் எவ்வளவு பணம் மிச்சப்படுகிறது என்பது தான் முக்கியம்.  அதே உணர்வோடுதான் மகளிர் உரிமைத் தொகையானது வழங்கப்படுகிறது.இந்த குழுக்கள் மூலமாக தயாரிக்கப்படும் பொருட்கள் இன்று மதி மூலம் உலகம் முழுவதும் சென்றடைகிறது.இதுபோன்று பெண்களுக்கான சக்தி மென்மேலும் வளரக்கூடிய வகையில் நம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் பெண்கள் பயன்படுத்திக் கொண்டு பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். அதற்கு அமைச்சர்களும், மாவட்ட நிர்வாகமும் என்றைக்கும் உங்களுடன் இணைந்து, உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து, உறுதுணையாக இருப்போம் என தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 329 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சுமார் ரூ.21.78 கோடி அளவில் கடனுதவிகள் வழங்கப்பட உள்ளன.விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்த அளவில் தற்போது வரை சுமார் 14,638 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2024-2025 ஆம் ஆண்டில் 18,930 உறுப்பினர்கள் அடங்கிய 982 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதனைப்போல், 2025-2026 ஆம் ஆண்டில் 12,923 உறுப்பினர்கள் அடங்கிய 921 குழுக்கள் அமைக்கப்பட்டன. இப்புதிதாக அமைக்கப்பட்ட சுய உதவிக்குழுவினருக்கு 2024-2025 ஆம் ஆண்டில்  900 கோடி வரையிலும், 2025-2026 ஆம் ஆண்டில் 500 கோடி வரையிலும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 349 முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது வரை 322 முகாம்கள் நடந்து முடிந்துள்ளன. இம்முகாமில் ஏறத்தாழ 65,000 வரை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 75 சதவீதம் வரை மனுக்கள் நிலுவையிலின்றி முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், இம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி ஏறத்தாழ 60,000 மகளிர் விண்ணப்பத்துள்ளனர். இவ்விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்ப்பு நிலையில் உள்ளன.மற்றொரு முக்கிய திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 36 முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது வரை 12 முகாம்கள் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளன.இதுபோன்ற, பல்வேறு நலத்திட்டங்களை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் நமக்கு வழங்கியுள்ளனர். இவற்றையெல்லாம் பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News