25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


முதுமையிலும் இளமையின்  பலம் பெற எளிய முறைகள்...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதுமையிலும் இளமையின்  பலம் பெற எளிய முறைகள்...

காலையில் வெறும் வயிற்றில் பழைய சோற்றுநீரை மோர் விட்டுக் குடிக்க, புரோபயாடிக் சத்து எளிதில் கிடைத்து.

உடல் பலம் பெற முதல் அடித்தளம் இது.காலையில் காபி, டீக்கு பதில் புதினா. கொத்தமல்லி, கறிவேப்பிலை, சிறிது சீரகம் சேர்த்துக் கொதிக்கவிட்டுச் சூடாகக் குடிக்க, இந்தப் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இலைகளில் உள்ள இரும்புச்சத்து உடல் நலம் பெறவும் ரத்தச்சோகை நீங்கவும் உதவும். மேலும், இதில் சேரும் சீரகம் நாள் முழுவதும் ஜீரண சக்தியை அதிகபடுத்த உதவும். இதில் உள்ள மைக்ரோ நியூட்டிரியன்ஸ் உடல் பலம் மேம்பட உதவும்.

காலையில் வேகவைத்த முளைக்கட்டிய சுண்டல் சாப்பிட, இதில் உள்ள புரோட்டீன் சத்து நாள் முழுவதும் உடல் சோர்வை நீக்கும்.

காலை 11 மணிக்கு குறுமிளகுடன் சேர்ந்த கீரை சூப் அல்லது காய்கள் மற்றும் சீரகம் சேர்ந்த சூப் குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

மதிய உணவில் பருப்பு சாம்பார், காய்,கீரை, கூட்டு, அதனுடன் துவையல் (இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, தூதுவளை, பிரண்டைத் துவையல்), ரசம் (ஜீரண சக்தி அதிகரிக்கும்), நீர்மோர் ஒரு டம்ளர் குடிக்க, குடலுக்கும் உடலுக்கும் நன்மை தருவதுடன் உடலின் நீர்ச்சத்து இழப்பைச் சீர்செய்யும்.

மாலையில் உலர் பழங்கள் (மா. ஆப்ரிகாட், பெர்ரி, திராட்சை, செர்ரி, அத்திப்பழம், உலர் ஆப்பிள் துண்டுகள்) சாப்பிடலாம். உலர் கொட்டைகள் சாப்பிடலாம்.

நிலக்கடலை, பாதம், அக்ரூட், பிஸ்தா, முந்திரி, வறுத்த கடலை, வறுத்த பச்சைப் பயிறு, வறுத்த மூக்கடலை, உலர் கொட்டைகள், உலர் பழங்கள் ஆகியவை மினரல் சத்துகளை வாரி வழங்கும்.

மாலையில் உளுந்தங்களி சாப்பிட நரம்புகள் பலம் பெற்று நரம்புத்தளர்ச்சி நீங்கும். சூடான பருத்திப்பால் அல்லது பாதம்பால் உடல் தளர்ச்சியை நீக்கி வலிமை தரும்.

இரவில் சிறுதானியங்களில் (குதிரைவாலி, தினை, சாமை, வரகு) செய்யப்பட்ட உணவுகளை எடுக்க, உடலின் உட்சூடு குறைவதுடன் சிறுதானியங்களில் நார்ச்சத்து உள்ளதால் மறுநாள் காலை மலச்சிக்கல் ஏற்படாது.

இவை தவிர தினமும் ஒரு ஸ்பூன் அமுக்கரா சூரணத்தைச் சூடான பாலில் கலந்து காலை, மாலை குடித்து வர 48 நாட்களில் உடல் பலம்பெறுவது நிச்சயம். மேலும், அஸ்வகந்தி லேகியம் இருவேளை உட்கொள்ள வேண்டும். இதிலுள்ள அஸ்வகந்தா. பால், தேன், நெய் போன்றவை உடலுக்கு இருமடங்கு வலிமையைத் தரும். அல்லது தேற்றாங் கொட்டை லேகியத்தை இருவேளை சாப்பிட உடல் இளைப்பு நீங்கி உடல் வளமையும் வலிமையும் பெறும். எனவே தான், தேற்றாங் கொட்டையிட்டு உடலைத் தேற்று என்பது கிராமத்து வழக்கு.

வாரம் ஒருமுறை உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க உடல் சூடு தணிவதுடன் எலும்பு, மூட்டுகள் வலிமை ரு பெறும். நல்லெண்ணெயைத் தோலில் தேய்க்கத் ச் தேய்க்க கொலோஜன் உற்பத்தி பெருகி உடல் சுருக்கம் மறையும்.

வாரம் ஒருமுறை சீரகம், சுக்கு, பெருங்காயம், வேப்பிலை கொழுந்து, துளசி, நுணா கொழுந்து ஆகியவற்றை அரைத்துச் சிறு சுண்டையளவு சாப்பிட நன்கு பசி எடுப்பதுடன் குடல் உறிஞ்சும் தன்மையை மேம்படுத்துவதால் சத்துகள்எளிதில் குடலால் உறிஞ்சப்பட்டு உடல் வலிமை பெறும். முடிந்தவர்கள் (சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து) வாரம் ஒருவேளை பழங்கள் மட்டும் சாப்பிட்டு உடல் இயக்கத்தைச் சீர்படுத்திக்கொள்ளலாம்.

உணவில் கற்ப மூலிகைகளான கரிசலாங்கண்ணிக் கீரை, வல்லாரைக் கீரை, தூதுவளை, பொண்ணாங்கண்ணி போன்ற கீரை வகைகளை 48 நாட்கள் (கடுகு, உப்பு, புளியைத் தவிர்த்து) சீரகம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட நரை (முடி வெளுத்தல்), திரை (தோல் சுருக்கம்) நீங்கி உடல் பலம் பெறும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News