25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தூக்கத்தை எக்காரணம் கொண்டும் தவற விடக்கூடாது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தூக்கத்தை எக்காரணம் கொண்டும் தவற விடக்கூடாது.

 ஒருவர் போதிய அளவு தூக்கத்தை பெறாத போது டைப்-2 நீரிழிவு பாதிப்பு முதல் இதய பாதிப்பு வரை பல நோய்கள் உருவாகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. உடலின் பல முக்கியமான ரசாயன மாற்ற செயல்பாடுகள் தூக்கத்தில்தான் நடைபெறுகின்றன. உடல் மற்றும் மூளை முழுமையாக ஓய்வெடுக்க, ஆற்றலை மீட்க, நினைவாற்றல் ஒருங்கிணைப்பு, உணர்ச்சி கட்டுப்பாடு. நோய் எதிர்ப்பு சக்தியை பெற தூக்கம் உதவுகிறது. போதிய தூக்கம் இல்லாத நிலையில், குறுகிய கால மற்றும் நீண்ட கால உடல்நலக்குறைவுக்கு வழிவகுத்து, அன்றாட செயல்பாட்டையும் பாதிக்கும்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, பள்ளி வயது குழந்தைகளுக்கு 9-11 மணி நேரமும், இளம் வயதினருக்கு 8-10 மணி நேரமும், 18-64வயதினருக்கு 7-9 மணி நேரமும், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 7-8 மணி நேரமும் தூக்கம் முக்கியம்.

ஒருவருக்கு போதிய தூக்கம் இல்லை என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் என்ன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாள் முழுவதும் சோர்வு அல்லது சோம்பல் தன்மை, அடிக்கடி கொட்டாவி விடுதல், மனதில் எரிச்சல், மனச் சோர்வு, பதட்டம், மன அழுத்தம், எந்த வேலையும் செய்ய ஆற்றல் அல்லது உந்துதல் இல்லாத நிலை, எதிலும் கவனம் செலுத்துவதில் சிரமம், நினைவுமறதி, அதிகரித்த பசி, அடிக்கடி சாப்பிட தோன்றுதல் ஆகிய அறிகுறிகள் தென்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  உடல் நலனை காக்க தூக்கம் மிகவும் அவசியம்,  மருத்துவர்கள் தூக்கத்தைஎக்காரணம் கொண்டும் தவற விடக்கூடாது என கூறுகின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News