மகளிர் சுயஉதவிக்குழுவின் சிறுதானிய உணவகம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறப்பு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவின் சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் (24.06.2024) திறந்து வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வறுமை ஒழிப்பு, சிறந்த சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்காக பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்திடவும், வேளாண்மையில் முதன்மையாக விளங்கக்கூடிய சிறு தானிய விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தேசிய மாநில ஊரக வாழ்வாதார இயக்க செயல் திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்;, மதி சிறுதானிய உணவகம் அமைக்க மாண்புமிகு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்ததன் தொடர்ச்சியாக, மதி சிறுதானிய உணவகம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அருப்புக்கோட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட சூலக்கரை சரஸ்வதி மகளிர் சுய உதவிக்குழுவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மதி சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.இந்த உணவகத்தில் ராகி, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு உணவு வகைகள் காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளைகளிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திருமதி பேச்சியம்மாள், அனைத்து உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply