25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >>


சஞ்சலத்தில் சமுதாயங்கள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சஞ்சலத்தில் சமுதாயங்கள் .

எத்தனையோஇடங்களில்சமுதாயக்  கூடங்களைப்பார்க்கிறோம்.  பல  நூற்றாண்டுகளுக்கு முன்பே நல்லதொரு குழுவினை அவர்களுக்குள் ஒற்றுமையாகக்   கூடி இப்படி இப்படி இருந்தால் வாழ்க்கைத் தரம் நன்றாக இருக்கும் என்று ஒரு அமைப்பை அவரவர்களுக்கு ஏற்ப ஏற்படுத்திக் கொண்டனர். ஒவ்வொருவரும் அவரவர்களுக்குள் ஒரு கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு அதன்படி சுமுகமாக சமுதாயங்கள் இயங்கிக் கொண்டிருந்தன.

ஆனால் தற்போதைய நிலைமை தலை கீழாக மாறிக் கொண்டு வருகின்றன. சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவதை சிலர் எதிர்த்து வருகின்றனர். பலர் ஆதரிக்கின்றனர். எதிர்ப்பு என்று வரும் பொழுது, காலத்திற்கு ஏற்றாற்போல சமுதாயக் கட்டுப்பாடுகள் பலவற்றை தளர்த்தி வேறு மாதிரி அமைத்து சமுதாயங்களை ஆரோக்கியமாகக் கொண்டு செல்ல முயற்ச்சிக்கின்றனர். 

இந்த மாதிரி சமுதாயங்கள் பல இன்று ஆட்டம் கண்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அபார விஞ்ஞானவளர்ச்சி.எல்லாமே அவசரகதியில் இயங்குவது. எதற்காக ஒருவர் பேச்சைக் கேட்க வேண்டும். நாமென்ன மூளையற்றவர்களா ?   சிந்திக்கத் தெரியாதவர்களா? என்று வாதம் செய்கின்றனர்.

சமுதாயத்திற்குள்ளேயேதிருமணம் செய்வது என்பது இனி வரும்  காலத்தில் பெரிய கேள்விக்குறி தான்.ஒவ்வொரு சமூகமும் ஒரே இடத்தில் இருந்து 'கொண்ட காலமெல்லாம் மலையேறிப்போய், உலகின் பல இடங்களில் எல்லா சமுதாயத்தினரும் வாழ்கின்றனர். கல்லூரி, வேலை செய்யும் இடங்களில்ஆண், பெண்பழகுகின்றனர்.தங்களுக்குப்பிடித்தவர்களைதேர்ந்தெடுத்து, பெற்றோர்களுக்கு  தெரிந்தோ, தெரியாமலோ திருமணம் செய்து கொள்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதா, ஆதரவு தெரிவிப்பதா? என்ற குழப்பத்தில் மக்கள் இன்றைய கால கட்டத்தில் உள்ளனர்.

 அவர்களுடைய திருமண வாழ்வு சந்தோஷமாக அமைந்தால் நிம்மதி தான். வருங்காலத்தில்  அவர்களுடைய குழந்தைகள் என்ன செய்வார்கள்  என்ற கலக்கத்தில் உள்ளனர். யார்? தைரியமாக கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சிலர் சொல்கிறார்கள். 

"ஏன்? பொற்றோர்கள் ஜாதகம் பார்த்து செய்து  கொண்ட திருமணங்கள் முறிந்து விடவில்லையா?" என்கின்றனர். காதல்  திருமணங்கள் மட்டும் முறிந்தால் இப்படிச்சொல்கிறீர்களே என்கின்றனர். இதையெல்லாம் படித்த பின் நமக்கு தலை சுற்றிஎன்ன செய்வது என்ற சஞ்சலங்கள் ஏற்படுகின்றது. அல்லவா? 

செய்வதறியாமல் திகைக்கின்ற குடும்பங்கள் நிறையவே உள்ளனர். இதற்கு சரியான தீர்வு என்ன? சமுதாயத்திற்கு கட்டுப்பட்டிருந்து ஏதேனும் பிரச்சனைகள் அதாவது விவாகரத்து, சொத்துப் பிரச்சனைகள் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ' ஆனால் காலப்போக்கில் ஒரு சில சுய நலம் மிக்க சமுதாயத் தலைவர்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இதை அலட்சியப்படு்த்த ஆரம்பித்தனர். வசதியுள்ளவர்கள், வசதியற்றவர்கள் என்ற வித்தியாசம் பார்த்ததிலும் நிராகரிக்கப்பட்டு வருகின்றன சமுதாயம்.

மாரல் சப்போர்ட்டாக இருக்கும் சமுதாயத்தை ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா? என்ற சஞ்சலத்தில் சமுதாயங்கள் இயங்கி வருகின்றன. சின்னத் தொழில் கூடமோ, பெரிய போர்க்களமோ இயங்கினால், அதற்கு முதலாளி தலைவர், கட்டுப்பாடுகள் இருந்தால் தான் தொழிற் கூடம் இயங்கும்.போரில் வெற்றி பெறலாம். இதைக் கருத்தில் கொண்டு சஞ்சலமில்லாத சமுதாயத்தை உருவாக்க நாம் பாடுபடலாம். 

திருமதி. குணா பாஸ்கர் ராஜா .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News