சோள மசாலா சாட் ( மாலை நேர ஸ்நாக்ஸ் )
தேவையான பொருட்கள்:
வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 கப்,
வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது),
தக்காளி -1 (விதை நீக்கி நறுக்கியது),
பச்சை மிளகாய் -1 (பொடியாக நறுக்கியது),
கொத்தமல்லித்தழை சிறிதளவு,
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சாட் மசாலா- 1 /2 டீஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு,
வெண்ணெய் -1 டீஸ்பூன் (விருப்பம்).
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ஸ்வீட் கார்னை சேர்க்கவும். அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
மிளகாய்த் தூள், மிளகுத்தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். எலுமிச்சை சாறு மற்றும் வெண்ணெய் சேர்த்து மீண்டும் கலக்கவும். உடனே பரிமாறினால் சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் தயார்.
குறிப்பு:
பரிமாறும் முன்பே எலுமிச்சை சாறு சேர்த்தால் சாட் ப்ரெஷ்ஷாகவும், சுவையாகவும் இருக்கும்.
0
Leave a Reply