25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தென்மேற்கு பருவமழைக்காலம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தென்மேற்கு பருவமழைக்காலம்

ஆசிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழைக்காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜூன் முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை மழைப் பொழிவு ஏற்படும் இந்த காலகட்டம் வெப்பத்துடன் கூடிய ஈரமான பருவம் என்று அழைக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன், அதுவரை நிலவி வந்த கோடை வெப்பம் வெகுவாக குறைந்து காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். சுற்றுப்புறத்தில் 3 டிகிரி முதல்6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும். பொதுவாக, தென்மேற்கு மழைக்காலம் முழுவதும் வெப்பநிலை குறைவாக சீராக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிக மழைப்பொழிவு காரணமாக இந்த வெப்பநிலை குறைவு இருக்கும்.

தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திராவின் அருகிலுள்ள பகுதிகளில் இந்த பருவத்தில் மிகக்குறைந்த மழைப் பொழிவு காணப்படும் என்பதால், அப்பகுதிகளில் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும்.அரபிக்கடலுக்கு அருகில் இருப்பதால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த பருவமழை தீவிரம் அடைந்து, இடி, மின்னல் மற்றும் பலத்த மழையாக மாறும்.

மழையை கணிக்கும் அறிவியல் கருவிகளையும் கடந்து சில நேரங்களில் பருவமழை அதற்கு முன் அல்லது பிந்தைய காலத் தில் ஏற்படும் போது மனிதர்களுக்கும், விவசாய பயிர்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது.எப்படி இருந்தாலும், தென்மேற்கு பருவமழையை நம்பி பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், ஏராளமான குடிநீர் ஆதாரங் களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *