25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


பாலக் கீரை முறுக்கு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாலக் கீரை முறுக்கு.

தேவையான பொருட்கள் :
அரிசி மாவு (Rice flour) - 2 கப்,
பாலக் கீரை (Palak spinach) - 1 கப் (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் - 2,
கடலை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவு - 2 மேசைக் கரண்டி,
வெண்ணெய் - 1 மேசைக் கரண்டி (உருகியது),
ஓமம் அல்லது சீரகம் - 1 தேக்கரண்டி,
எள்ளு - 1 தேக்கரண்டி,
பெருங்காயத்தூள் - சிறு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.


செய்முறை:
பாலக் கீரையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.அதனுடன் பச்சை மிளகாய்மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒருஅகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, வெண்ணெய், ஓமம் (அல்லது சீரகம்),எள்ளு, பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ள பாலக் கீரை விழுதைச் சேர்க்கவும்.தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து, முறுக்கு மாவுபதத்திற்கு மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும்.
முறுக்கு அச்சில் உங்களுக்குப் பிடித்த அச்சு (நட்சத்திர அச்சு அல்லது முள் அச்சு) போட்டுக்கொள்ளவும்.
பிசைந்த மாவை அச்சில் வைத்து, எண்ணெயில் நேரடியாகவோ அல்லது ஒரு கரண்டியின் பின்புறத்திலோ முறுக்கு வடிவில் பிழியவும்.மிதமான தீயில் வைத்து, எண்ணெய் bubbling (பொங்குவது) அடங்கும் வரை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.பாலக் கீரை முறுக்கு தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News