மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, I A S., அவர்கள், விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், (09.10.2026) விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வையும் உறுதி செய்வதற்கான முக்கியமான சட்டமாகும். அரசுத் துறைகளின் செயல்பாடுகள், அரசு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை உரிய நடைமுறைகளின்படி அறிந்துகொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுவதற்கு இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் பொதுமக்கள், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி உரிய அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம்.மேலும், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இச்சட்டத்தின் நோக்கம், பயன்பாடு மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்வது அவசியமாகும்.
இச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணிகள் மூலம் சட்டம் தொடர்பான புரிதலை பொதுமக்களிடையே ஏற்படுத்தி, பொறுப்புள்ள குடிமக்களாகச் செயல்படுவதற்கான விழிப்புணர்வை வளர்க்க முடியும். எனவே, பொதுமக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து தெரிந்துகொண்டு, அதன் மூலம் தங்களுக்குத் தேவையான தகவல்களை உரிய வழிமுறைகளில் பெற்றுப் பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இப்பேரணியில், சுமார் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்று தேசபந்து மைதானம் முதல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை பேரணியாக சென்று இச்சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பொறுப்பு திரு.சோமசுந்தர சீனிவாசன், அரசு அலுவலர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply