25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு போட்டிகள்  17th november 2025
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் 17th november 2025

உலக குத்துச்சண்டை கோப்பை தொடர் பைனல்ஸ்உ.பி., மாநிலம் கிரேட்டர் நொய்டாவில்,  பெண்களுக்கான 54 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரீத்திபவார், உஸ்பெகிஸ்தானின் நிகினா உக்டமோவா மோதினர். உடல் நிலைகாரணமாக , ஒரு ஆண்டுக்கு பின் போட்டிக்கு திரும்பிய பிரீத்தி 5-0 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.

இந்தியாவின் மீனாக்ஷி பெண்களுக்கான 48 கிலோ பிரிவு காலிறுதியில் கஜகஸ்தானின் போலட் அக்போட்டை வீழ்த்தினார். மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அங்குஷ் பங்கால் (80 கிலோ), நரேந்தர் பெர் வால் (+90 கிலோ) வெற்றி பெற்றனர்.

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்  எகிப்தில் நடக்கும் 25 மீ., 'சென்டர் பயஸ் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஹர் பிரீத் சிங் (291.10 புள்ளி) 2வது இடம் பிடித்தார்.

உலக கோப்பை ஸ்னுாக்கர் லீக் போட்டிஓமனில் நடக்கும் இந்தியாவின் பங்கஜ் அத்வானி 3-0 என, பஹ்ரைனின் ஹேஷாம் அல்சாகரை வீழ்த்தினார். தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த அத்வானி, 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான பில்லி ஜீன்கிங் கோப்பை டென்னிஸ்பெங்களூருவில் நடந்த 'பிளே-ஆப்' போட்டியில் இந்திய அணி 0-2 என நெதர்லாந்திடம் வீழ்ந்தது. ஏற்கனவே சுலோவேனியாவிடம் தோற்ற இந்தியா, பைனலுக்கான தகுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News