விளையாட்டு போட்டிகள் JUNE 21 ST
பாட்மிண்டன்
தாய்லாந்தின் ஆசிய பாரா பாட்மின்டன் சாம் பியன்ஷிப் நடக்கிறது.பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் (எஸ்.யு.5), இந்தியாவின் துளசிமதி (தமிழகம்), ஜப்பானின் சுகினோவை சந்தித்தார். துளசிமதி 21-6, 21-15 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் இரட்டையர் காலிறுதியில் (எஸ்.எல்.3) இந்தியாவின் துளசிமதி, மானசி ஜோஷி ஜோடி, இந்தியாவின் பாலக் கோலி, தாய்லாந்தின் சனிதா ஜோடியை 21-10, 21-16 என வீழ்த்தியது.கலப்பு இரட்டையர் 'ரவுண்டு-16' போட்டியில் துளசிமதி, நிதேஷ் , ஜோடி 21-14, 21-11 என இந்தியாவின் சஞ்சனா, ஜதின் ஆசாத் ஜோடியை வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.
செஸ்
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடக்கிறது.இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட் பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். நேற்று இரண்டாவது சுற்று நடந்தது. பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் ஷம்சி தினை சந்தித்தார். பிரக்ஞானந்தா, 33வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
அர்ஜுன், ஈரானின் பர்ஹாம் மோதிய போட்டி 35வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. அரவிந்த் சிதம்பரம், உஸ்பெகிஸ்தான் வீரர் நாடிர்பெக்கிடம் தோல்வியடைந்தார். முதல் இருசுற்று முடிவில் இந்திய வீரர்கள் அர்ஜுன் (1.5 புள்ளி), பிரக் ஞானந்தா (1.5) 3, 4 வது இடத்தில் உள்ளனர்.
ஹாக்கி
ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில் இந்திய மாஸ்டர்ஸ் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கிறது.
நேற்று நடந்த பெண்கள் போட்டியில் கர்நாடகா அணி 12-0 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஹிமாச்சல் அணி, கேரளாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆண்களுக்கான போட்டியில் ஆந்திரா அணி 4-3 என கேரளா அணியை வீழ்த்தியது.
0
Leave a Reply