25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி சுரேஷ் ,6 வயதில் சொந்த இணையதளம்,11 வயதில் CEO.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி சுரேஷ் ,6 வயதில் சொந்த இணையதளம்,11 வயதில் CEO.

இளமையில் வித்தியாசமான திறமையை வெளிப்படுத்தும் சில குழந்தைகளில் ,ஒரு புத்திசாலி சிறுமி தான் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி சுரேஷ். 1998 பிப்ரவரி 5ஆம் தேதி பிறந்த ஸ்ரீ லட்சுமி, மூன்று வயதில் கணினி பயன்படுத்த தொடங்கி, ஆறாம் வயதில் தனது முதல் இணையதளத்தை வடிவமைத்தார். 11வது வயதில் eDesign Technologies என்ற இணைய வடிவமைப்பு நிறுவனத்தை தொடங்கி உலகின் மிகவும் இளமையான CEOகளில் ஒருவராக விளங்கினார்.

 ஸ்ரீலட்சுமி கோழிக்கோட்டில் உள்ள பிரெசென்டேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் படித்து, பின்னர் சென்ட் ஜோசப் கல்லூரியில் வணிக மேலாண்மை இளங்கலை பட்டம் பெற்றார். தற்போது eDesign Technologies நிறுவனத்தின் CEO ஆக செயல்பட்டு வருகிறார்

8ஆம் வயதில் தனது பள்ளிக்காக இணையதளம் வடிவமைத்து தனது திறமையை நிரூபித்தார். இவர் நிறுவனம் SEO, கிராபிக் டிசைன், இணையதள மேம்பாடு உள்ளிட்ட சேவைகள் வழங்குகிறது. மைக்ரோசாஃப்ட், நோக்கியா, கோகா-கோலா போன்ற பெரிய நிறுவனங்களும் இவரது கிளையண்டுகளாக உள்ளனர்.

 இணைய வடிவமைப்பில் தன்னுடைய சிறப்பான சேவைக்காக 2008 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் விருதும், Golden Web Award (USA), Sixty Plus Education Award (Canada) போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார். ஊடக  இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.51 கோடி என்று கூறப்படுகிறது. அடுத்த தலைமுறையினருக்கு இவரது வாழ்க்கை ஒரு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News