தமிழ்நாடு கிரிக்கெட் போட்டிகள்
14- ம் தேதி போட்டிகள்
டி.என்.பி.எல்., தொடரின் இரண்டாவது கட்ட போட்டி சேலத்தில் நடக்கின்றன. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் கோவை, சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேப்பாக்கம் அணி கேப்டன் பாபா அபராஜித் 'பீல்டிங்' தேர்வு செய்தார். கோவை அணி 19.4 ஓவரில் 144 ரன்னில் ஆல் அவுட்டானது, சேப்பாக்கம் அணி 15.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
15 - ம் தேதி இரண்டு போட்டிகள்
சேலத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட் டியில் திருச்சி, திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி கேப்டன் சாய் கிஷோர் 'பவுலிங்' தேர்வு செய்தார்.திருச்சி அணி 20 ஓவரில் 7 விக்கெட் டுக்கு 164 ரன் எடுத்தது..திருப்பூர் அணி 18.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி
மற்றொரு லீக் போட்டியில் சேலம், நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவுலிங்' தேர்வு செய்தார். சேலம் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன் எடுத்தது நெல்லை அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 130 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply