ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ராணுவத்தில் பணியாற்றி வரும், தமிழக வீரர் விஸ்வநாத் சுரேஷ் தங்கம் வென்றார்.
மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் ,ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி யில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரரான விஸ்வநாத் சுரேஷ், ஜப்பானின் டாய்சி இவாயை சந்தித்தார். விஸ்வநாத் சுரேஷ் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். சென்னை பெரம்பூரை சேர்ந்த 21 வயதான விஸ்வநாத் சுரேஷ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்திய வீராங்கனைகள் 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்கள் வென்று பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்தனர்.
இந்தியா மொத்தம் 5 தங்கம் உள்பட 16 பதக்கங் களை கைப்பற்றி ,2-வது இடம் பிடித்தது.
0
Leave a Reply