25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் 04.07.2026 அன்றும், இரண்டாம் தாள் 05.07.2026 அன்றும் நடைபெறவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் 04.07.2026 அன்றும், இரண்டாம் தாள் 05.07.2026 அன்றும் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் 04.07.2026 அன்று 7 மையங்களிலும், இரண்டாம் தாள் 05.07.2026 அன்று 14 மையங்களிலும் நடைபெறவுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும், ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இத்தேர்விற்கான முதல் தாளினை விருதுநகர் மாவட்டத்தில் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 266 தேர்வர்களும், சொல்லுவதை எழுதுபவர்கள் (Scribes) 6 நபர்களும், சிவகாசி முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில்  300 தேர்வர்களும், 40 மாற்றுத்திறனாளிகளும்,

விருதுநகர்  நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 289 தேர்வர்களும், 09 மாற்றுத்திறனாளிகளும்,  சாத்தூர் எஸ்.எச்.என்.எட்வர்ட் மேல்நிலைப்பள்ளியில் 300 தேர்வர்களும், அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 300 தேர்வர்களும்,  அருப்புக்கோட்டை சாலியர் மகாஜன சபை மேல்நிலைப்பள்ளியில் 300 தேர்வர்களும், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கன்னட மொழிக்கு ஒரு தேர்வரும், தமிழ் மொழிப் பாடத்திற்கு 177 தேர்வர்களும் என ஆக மொத்தம் 7 மையங்களில் 1933 தேர்வர்களும், 49 மாற்றுத்திறனாளிகளும், 06 சொல்லுவதை எழுதுபவர்களும் (Scribes) முதல் தாளினை எழுத உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, 05.07.2026 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் தாளினை விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 268 தேர்வர்களும், சொல்லுவதை எழுதுபவர்கள் (Scribes) 8 நபர்களும், சிவகாசி முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் 284 தேர்வர்களும், 04 சொல்லுவதை எழுதுபவர்களும் (Scribes) விருதுநகர் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும், 40 மாற்றுத்திறனாளிகளும், சாத்தூர் எஸ்.எச்.என்.எட்வர்ட் மேல்நிலைப்பள்ளியில் 277 தேர்வர்களும், 17 மாற்றுத்திறனாளிகளும், சாத்தூர் எஸ்.எச்.என்.எத்தில்ஹார்வி மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும்,  

அருப்புக்கோட்டை சாலியர் மகாஜன சபை மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 223 தேர்வர்களும், அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 262 தேர்வர்களும், 02 சொல்லுவதை எழுதுபவர்களும் (Scribes) திருத்தங்கல் எஸ்.என்.ஜி.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 270 தேர்வர்களும், 30 மாற்றுத்திறனாளிகளும், திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும்,  திருத்தங்கல் எஸ்.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும்,  

சிவகாசி கார்நேசன் மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும், சிவகாசி எஸ்.எச்.என்.வி.மேல்நிலைப்பள்ளியில் 245 தேர்வர்களும் என ஆக மொத்தம் 14 மையங்களில் 3789 தேர்வர்களும், 87 மாற்றுத்திறனாளிகளும், 14 சொல்லுவதை எழுதுபவர்களும் (Scribes) இரண்டாம் தாளினை எழுத உள்ளனர்.

மேலும், தேர்வானது மாற்றுத்திறனாளிகள் மற்றும் சொல்லுவதை எழுதுபவர்களுக்கு (Scribes) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரையிலும், பிற தேர்வர்களுக்கு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.
மேலும், தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம், குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் போதிய அளவில் இருப்பதை மாவட்ட நிர்வாகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் எவ்வித அச்சமும், பதற்றமும் இன்றி முழு நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா , I A S ., அவர்கள் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News